Connect with us

உலகம்

காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஐ.நாவில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

Published

on

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து, ஐ.நா சபையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நேற்று அதிரடியாக கைப்பற்றினர்.

ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, நிபந்தனை இன்றி சரண் அடைந்து, அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டு அரசுக்கு தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி, காபூலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில் மீண்டும் பழமைவாதம் தலை துாக்கும் என அஞ்சும் மக்கள், வெளிநாடுகளில் தஞ்சம் கேட்க துவங்கியுள்ளனர்.

தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை.