அப்புத்தளையில் பிரதேச இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் முடிவடைந்துள்ளது. அப்புத்தளையில் அசாங்கத்திற்கு எதிராக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் கண்டி – பதுளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலை...
சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிற்கான தனியார் துறை பேருந்துகளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கிராமப்புறங்களுக்கு...
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்களுக்கு...
எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு, பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக...
மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் சமிக்ஞை கட்டமைப்பு...
புகையிரத கட்டண அதிகரிப்பு மற்றும் திருத்தங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை புகையிரத கட்டணம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும், டீசல் விலைக்கு...
நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் புகையிரதக்...
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த...
பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு – கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.