உள்நாட்டு செய்தி
பஸ் கட்டணங்கள் உயர்வு… புகையிரதக் கட்டணத்திலும் திருத்தும் வரலாம்?

எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் புகையிரதக் கட்டணங்கள் இதுவரை அதிகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 17 ரூபாவாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 20 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஏனைய கட்டணங்கள் 15% இனால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.