இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய பிரமுகர்களுடனான இருதரப்பு ஈடுபாடுகளைத் தொடர் இந்து, இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 5 ஆந் திகதி நிறைவு செய்தார். இந்த 3 நாள் விஜயத்தின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா சந்தித்தார். மாண்புமிகு பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட 4 அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைப்பதற்கான மெய்நிகர் ரீதியான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம், வடமராட்சி மகளிர் கல்லூரியில் ஒரு கேட்போர் கூடம், மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் காலி மாவட்டங்களில் 1,035 கிராமசக்தி வீடுகள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் மெனிக் பண்ணையில் 24 வீடுகள் ஆகிய கட்டுமானங்களை உள்ளடக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்தில், வெளிநாட்டு அமைச்சர், கல்வி அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், தோட்ட வீட்டுவசதி மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த அங்குரார்ப்பண வைபவத்தில், மக்களுக்கிடையிலான இணைப்புக்கள் எமது உறவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாவதுடன், அதன் விளைவாக 2021 அக்டோபர் 20ஆந் திகதி இடம்பெறவிருக்கும் குஷிநகருக்கான முதலாவது பௌத்த யாத்திரிகர்களின் விமானமானது, இந்தியா – இலங்கை உறவுகளில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடனான பௌத்த இணைப்பு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது சிறந்ததொரு வாய்ப்பாகும் என வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளருக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2021 அக்டோபர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றதுடன், இதில் இரு நாடுகளும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ‘இருதரப்பு முடிவுகள் தொடர்பில் இரு நாடுகளின் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்…’...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அல்லது உறவினர்களுக்கு 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இழப்பீட்டுத் திட்டம், மாநில...
இலங்கை தமிழர் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை அவர்...
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (04) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய பிரதமர் நரேந்திர...
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் – 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்படி பிரதான...
இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வௌியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்தக்கூடிய விதம் தொடர்பில் இதன்போது கவனம்...
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று (03) இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்...
இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய...