51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது...
எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க...
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கமும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா இராகலை – மந்தாரம்நுவர பிரதான வீதியின் கோணகல, கல்கந்த பகுதியில் கற்பாறைகள் சரிந்து விழந்துள்ளமையால் அந்த வீதியூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் கடந்த...
12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
எதிர்வரும் திங்கட்கிழமை (10/1) முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது....
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுடன் இணைந்து தீர்மானிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போதே அவர் இதனை கூறியள்ளார். “முன்பு மொட்டு...
முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி முதலாம் திகதி...
பேருந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமலுக்கு வருகிறது. புதிய கட்டணத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது. 14 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 17 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது....
வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் அலரி மாளிகையில் இன்று (04) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த...