உள்நாட்டு செய்தி
இலங்கை அமெரிக்காவுக்கு வழங்கிய உறுதி
அமெரிக்காவுடனான உறவை தொடர்ந்தும் பேண எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபகஸ கூறியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (04) அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சாங்கை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர் இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, அரசியல் ரீதியான உறவை மேலும் ஊக்குவிப்பதாக கூறினார்.