Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகள் ஆரம்பம்

Published

on

2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (07) ஆரம்பமாகிவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளே ஆரம்பமாகியுள்ளன.

பாடசாலை ஆம்பமாகும் நிலையில், பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அனைத்து நாட்களிலும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவாரம் விட்டு ஒருவாரம் என்ற அடிப்படையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் மாணவர்களை சமமான எண்ணிக்கையில் 03 குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர் குழுக்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், மாற்று வழிமுறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பாடத்திட்டமும் பூரணப்படுத்தப்பட வேண்டுமென கல்வியமைச்சின் செயலாளரினால் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,பாடசாலைகளில் உள்ள உணவகங்களை (canteens)  மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சுகாதார வழி காட்டிகளுக்கு அமைவாக இவை செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.