Connect with us

உள்நாட்டு செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

Published

on

” பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.  ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இச்சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.  

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று (06) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.