உள்நாட்டு செய்தி
திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிசூடு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும் சிலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூவர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
மற்றவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார் என எமது செய்தியாளர் கூறினார்.
துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி சகிதம் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.