Connect with us

உள்நாட்டு செய்தி

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள்…

Published

on

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான நிகழ்வு நிகழ்வு காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெறவுளளது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 இருந்து 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை சுனாமி நாட்டை தாக்கியது.

இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பதிவாகியிருந்தாலும், டிசம்பர் 26, 2004 அன்று சுமத்ராவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

சுனாமியில் குறைந்தது 35,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 5,000 பேர் காணாமல் போயினர்.

சுனாமியால் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 5,002,456 பேர் பாதிக்கப்பட்டதுடன் சமூக, பொருளாதார, கலாசார, சுற்றாடலுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்த அனைவருக்கும் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.