Connect with us

உள்நாட்டு செய்தி

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

Published

on

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90வது வயதில் இன்று காலஞ் சென்றுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

1979ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில், சிறிசேன குரே கொழும்பு மேயராக கடமையாற்றியுள்ளார்.

1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராகவும், அவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.