உள்நாட்டு செய்தி
இன்றும் மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேவைக்கு ஏற்ப மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.