உள்நாட்டு செய்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குழு

பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார்.
இன்று (08) காலை பாராளுமன்றம் ஆரம்பமானதை தொடர்ந்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.
குழுவின் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – தலைவர்
சமல் ராஜபக்ஷ
பந்துல குணவர்தன
வாசுதேவ நாணயக்கார
சுசில் பிரேமஜயந்த
கயந்த கருணாதிலக
ரவூப் ஹக்கீம்
அனுர பிரியதர்ஷன யாப்பா
விஜித ஹேரத்
ரஞ்சித் மத்துமபண்டார
எம். ஏ சுமந்திரன்