Connect with us

Sports

LPL இன்று ஆரம்பம்

Published

on

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் LPL போட்டிகள் டிசம்பர் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தோடரில் கொழும்பு ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயண்ட்ஸ், கோல் கிலேடியேட்டர்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி வோரியர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதன்படி இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ள முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிலேடியேட்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதேவேளை, போட்டிகளை பார்வையிட 50 வீத இரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *