Sports
மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் உலக சாதனை

மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5 ஓவர் வீசி 119 ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் இந்திய வீரர்கள் 10 பேரின் விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஜாஸ் படேல் பெற்றார்.
இதற்கு முன்னதாக இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர்.