உள்நாட்டு செய்தி
ஊடகங்களால் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும், ஆனால் பாதுகாக்க முடியாது – பிரதமர்

அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்து கடினமான தீர்மானங்களை எடுக்கும் யுகத்தை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கு எசிதிசி காப்புறுதி பத்திரத்தை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.
காப்புறுதியை பெறும் ஐந்து ஊடகவியலாளர்களுக்கு பிரதமரால் இதன்போது காப்புறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
“எசிதிசி” காப்புறுதி திட்டத்தில் சுமார் 3000 ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட பிரதமர்,
ஊடகங்களால் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும். எனினும், அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது என குறிப்பிட்டார்.