Connect with us

உலகம்

ஒமிக்ரான் வைரஸ் உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: WHO

Published

on

ஒமிக்ரான் வைரஸ் உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். எனவும் மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும் எனவும்அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரானால் உலக அளவில் பாரிய ஆபத்து உள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.

அதே நேரத்தில் ஒமிக்ரான் தொடர்பாக இன்னும் முழுமையாக ஆய்வுகள் நடத்தப்படவில்லை எனவும் அதனால் அதன் பாதிப்பு தொடர்பாக நிச்சயமற்ற தன்மையுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியு ள்ளது.

மேலும் ஏற்கனவே போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் ஒமிக்ரானை கட்டுப்படுத்துமா? என்பதை கண்டறிய பல வாரங்கள் தேவைப்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பானில் முதற் தடைவையாக ஓமிக்ரோன் கொவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.