உள்நாட்டு செய்தி
வரவு செலவுத் திட்டம் – 2022 இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நாடாளுமன்றத்தில் ஏழு நாட்களாக நடைபெறும் விவாதம் இன்றுடன் நிறைவடைகிறது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை 23 ஆம் திகதி முதல் குழு நிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.