உள்நாட்டு செய்தி
தரம் 6 7 8, மற்றும் 9 ஆகியவற்றுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் தரம் 6 7 8, மற்றும் தரம் 9 ஆகியவற்றுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.