Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டுப்பற்று மிக்கவர்கள் நாங்கள்:றிசாத்

Published

on

சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக நியமித்து எமக்கு மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்து நினைத்ததை செய்வோம் நீங்கள் இணங்கிச்செல்ல வேண்டும் என்ற செய்தியை கூறியுள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாட்டில் எவ்வித பயங்கரவாதமும் தலைதூக்க கூடாது என்று விரும்பும் நாட்டுப்பற்று மிக்கவர்கள் நாங்கள். பயங்கரவாத செயல்களுக்கு நாங்கள் எப்போதும் துணை போகின்றவர்கள் இல்லை. இஸ்லாமிய பெயரில் பல சதிகள் இடம்பெற்று முஸ்லிங்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கியுள்ளார்கள்.

எந்த குற்றமும் செய்யாத சிறு பிள்ளைகள், உலமாக்கள், சட்டத்தரணி, அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழ் சகோதரர்கள் என பலரும் பல மாதங்களாக சிறையில் வாடுகிறார்கள்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.