உள்நாட்டு செய்தி
சீரற்ற காலநிலை: மலை நாட்டில் கடும் மழை

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கனியோன் லக்ஸபான நீரத்தேக்கங்களின் வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நோட்டன் பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீரத்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகளிலும் நீர் வான் பாய்கின்றன.