உள்நாட்டு செய்தி
நுவரெலியாவில் விவசாய நிலங்களில் வெள்ளம்

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா – மீபிலிமான, மாகொட, எல்க்பிளைன்ஸ் மற்றும் பிளாக்பூல் பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.