உள்நாட்டு செய்தி
நோர்வூட் நிவ்வெலி தோட்டத்தில் தீ விபத்து

நோர்வூட் நிவ்வெலி தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 12 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீ விபத்தினால் எந்தவித உயிராபத்துகளும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்கள்
தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.