Connect with us

உலகம்

சூடான் பிரதமர் கைது

Published

on

சூடான் பிரதமரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, பிரதமர் Abdallah Hamdok வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சூடான் பிரதமரின் ஊடக ஆலோசகரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர் வேறு இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அல்-ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கைதை தொடர்ந்து அங்கு பரவலாக போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.