உள்நாட்டு செய்தி
சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்

சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான சுகாதார வழிக்காட்டல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து பாடசாலைகள் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.