உள்நாட்டு செய்தி
இன்று (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள்

இன்று (25) முதல் மாகாணங்களுக்குள்ளான ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் இன்று (25) முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள ரயில் பயணிகளுக்கு மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.
இன்று (25) கொழும்புக்கு வரும் ரயில் அளுத்கம, அவிசாவளை ,அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.