Sports
இந்தியாவை பந்தாடிய பாகிஸ்தான்

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பெற்றுக் கொண்டது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 152 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றிப் பெற்றது.
இதன்படி பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் இந்திய அணியை வென்றது.