Sports
மைதானத்தில் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்ட இருவருக்கு தண்டம்

ICC T20 தொடரின் சூப்பர் 12 சுற்றின் 15 ஆவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்தவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் லிட்டன் தாஸ் மற்றும் மொஹம்மட் நயீம் ஆகியோர் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.
போட்டியின் 6 ஆவது ஓவரை வீசிய லஹிரு குமாரவின் பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்திருந்தார்.
இதன்போது லஹிரு குமார மற்றும் லிட்டன் தாஸிற்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் லஹிரு குமாரவிற்கு போட்டி கட்டணத்தில் 25 விகிதமும் லிட்டன் தாஸிற்கு போட்டியின் சம்பளத்தில் 15 விகிதமும் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.