Connect with us

Uncategorized

இங்கிலாந்து அணி T20 உலக கிண்ணத்தை வெற்றுள்ளது

Published

on

இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2022 ஆம் ஆண்டின் T20 உலக கிண்ணத்தை வெற்றுள்ளது.

இது இங்கிலாந்து அணி வெல்லும் 2வது T20 உலகக் கிண்ணம் ஆகும்.

இன்றைய இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூட் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாம் கரண் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.