உள்நாட்டு செய்தி
மேலும் 51 கொவிட் மரணங்கள்

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 513,609 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.