உள்நாட்டு செய்தி
முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகள் அடங்கிய சகல பிரிவுகளுக்கும் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அதனை மேலும் நீடிக்காமலிருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, நாடு மீள திறக்கப்பட்டாலும், பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.