உள்நாட்டு செய்தி
மேலும் 66 கொவிட் மரணங்கள்
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர் .
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை அறிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 506,927 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது.