Connect with us

உள்நாட்டு செய்தி

விமலின் தலைக்குள் ஒன்றும் இல்லை – மனோ

Published

on

விமல் வீரவங்ச ஒரு முட்டாள் துரோகி, எனவும் அவரின் தலைக்குள் ஒன்றும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விமல் அமைச்சராக இருக்கும் ஆட்சியல் தான் ஒரு முட்டாளாக இருப்பதை எண்ணி பெருமை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

விமல் தன்னை முட்டாள் என கூறியதில் தனக்கு கவலையில்லை எனவும் மாறாக அவருக்கு வாக்களித்த கொழும்பு மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார் எனவும் அவர் கூறினார்.