உள்நாட்டு செய்தி
தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.
நாட்டில் கொரோனா பரவலைகட்டுப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20 திகதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் நிலையில், கடுமையான சுகாதார வழிமுறைகளுக்கமைய நாட்டை மீண்டும் திறக்க முடியுமென ராகமை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெல்டா திரிபுடனான கொரோனா அலையில் சில கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் ஏற்படுமென தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த தரவுகள் ஆரயப்பட்டதன் பின்னரே நாட்டை திறப்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானத்தினை எட்ட முடியுமெனவும் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.