Connect with us

உள்நாட்டு செய்தி

ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம்: ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்

Published

on

தமது வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று(6) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் இவ்வாறு மீள விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் ரசிந்த்ரா ஜயசூரிய உத்தரவிட்டார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *