உள்நாட்டு செய்தி
சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்:கல்வி அமைச்சர்

சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (31) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனை குறிப்பிடடார்.
அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக 5ஆயிரம் ரூபா கொடுப்பனவை ஆசிரியர் சங்கம் நிராகரித்துள்ளது என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர பதிலளிக்கையில் ,இந்த கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சுற்றறிக்கை முதலானவை இன்னும் வெளிவரவில்லை அவை வெளிவந்த பின்னர் ஆசிரியர்கள் ,மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்வார்கள்.
24 வருடங்களாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழி வகுக்கும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்
இதேவேளை இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
01. ‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்
‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப செயற்குழு அதிபர்இ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் 33 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.
• அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கொள்கை ரீதியாக அங்கீகரித்தல்
• ஆசிரியர் சேவைஇ ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை வரைவிட்ட சேவையாக 2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்
• அமைச்சரவை உப செயற்குழு மூலம் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சம்பளத் திருத்தங்கள்இ 2022 வரவ செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
• 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5இ000ஃ- ரூபா விசேட கொடுப்பனவு செலுத்துதல்
• உப செயற்குழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்