Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது

Published

on

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக அந்த நிறுவனங்களுக்கு மாத்திரம் பஸ்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை நேற்றிரவு 10 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொது பஸ் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டு செல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில் ஈடுபடும்.

வழமையான பயணிகள் போக்குவரத்துக்காக ரயில்கள் சேவையில் ஈடுபடாதென ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையினருக்காக விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் சுங்கம் உள்ளிட்டவற்றில் தொழில் புரியும் ஊழியர்களுக்காகவும் சில பஸ் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ண ஹங்ஸ தெரிவித்துள்ளார்.