Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது?

Published

on

நேற்று இரவு 9 மணி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதாவது 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 415 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பஸ் கட்டணங்கள் குறைக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.