Connect with us

உள்நாட்டு செய்தி

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதி ப்பு

Published

on

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று (2) பிற்பகல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த வீதிக்கு பதிலாக கொட்டகலை முதல் போகாஹவத்தை வரையான மாற்று வீதியை தோட்ட பாதையின் ஊடாக பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதியின் நடுவே விழுந்த மரத்தில் பல பெரிய குளவி கூடுகள் கலைந்து காணப்படுகின்றது.

திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளும், கொட்டகலை பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து வீழ்ந்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.