உள்நாட்டு செய்தி
“அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்”

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும்.
இந்த வீதிகள் எதுவும் கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களும் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது ஒருபுறமிருக்க எந்த வேலையும் செய்யாமல் மக்களை அப்பட்டமாக ஏமாற்றியதாகத் தெரிவித்த அமைச்சர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் தான் இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்ததாகவும் கூறினார்.
இதேவேளை, ஹட்டன் – நோர்டன் நகரங்களுக்கிடையிலான பிரதான வீதியை காபட் இட்டு செப்பனிடும் பணிகள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
82 மில்லியன் ரூபா செலவில் இந்த புனரமைப்பு பணிகள் இடம் பெறுகின்றன.
அரசாங்கத்தின் மகநெகும திட்டத்திற்கமைய இந்த வீதி புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.