Connect with us

உள்நாட்டு செய்தி

பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன விபத்தில் பலி

Published

on

பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன லிந்துலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

படப்பிடிப்புக்காக நுவரெலியா சென்றிருந்த நிலையில் மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்த வேளை அவர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

…………………………………up date…………………………………………..

குறித்த வேனை செலுத்தி சென்ற சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸாரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்த நடிகையின் சடலம் மீட்க்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.