உள்நாட்டு செய்தி
சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தேடுதல்
சிறுவர்களை ஈடுபடுத்த முடியாத, பாதுகாப்பற்ற தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை இன்னும் 02 மாதங்களில் சட்டமாக இயற்ற எதிர்பார்த்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்தார்.
இதனிடையே, 06 மாதங்களுக்குள் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கடந்த மாதத்தில் அதிகமாக பதிவானதாகவும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.