உள்நாட்டு செய்தி
வாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல் நடைமுறைக்கு வரும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி, எல்.பி.ஜி 18 லிட்டர் அல்லது 9.6 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விலைகளை மாவட்ட அளவில் மாற்றலாம் எனவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகபட்ச சில்லறை விலை 1,150 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஒரு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை ரூ .1,158 ஆகவும், காலி மாவட்டத்தில் ரூ .1,181 ஆகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையான 1,259 ரூபா யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோர் விவகார அதிகார சபை வழங்கிய வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படாத நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.