Uncategorized
இலங்கை வந்த மற்றுமொரு கப்பல்

3,120 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் இன்று (16) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போது எரிவாயு சரக்குகள் இறக்கப்பட்டு வருவதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு நிரப்பும் பணி ஆரம்பித்தவுடன் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் வகையில் மொத்த சந்தைக்கு எரிவாயு வெளியிடப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.