Connect with us

Politics

மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் – பிரதமர்

Published

on

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகின் அநேக நாடுகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினையினால் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரமதர் கூறியுள்ளார்

அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் பிரமதர் கூறியுள்ளார்

இலங்கையில் நூற்றுக்கு 6 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கையை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆண்டு முன்னெடுக்கவுள்ளதுடன் நூற்றுக்கு 8 வீத வெட் வரியை தொடர்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாய, மீன்பிடி துறையில் அறவிடப்படும் வருமான வரி, எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீக்கப்படும் என அவர் தெ.ரிவித்துள்ளார்.

மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்க்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்டும் என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் கூறியுள்ளார்.

மேலும், பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபா கடன் வழங்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

உள்ளூர் மீன்பிடி மேம்பாட்டுக்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்தவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு பிரதமர் முன்மொழிந்துள்ளார்.

சுற்றாடல் உணர்திறன் முறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அதனை தடை செய்யுமாறு பிரதமர் முன்மொழிந்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாசித்து நிறைவு செய்தவுடன், பாராளுமன்றம் நாளை (18) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.