Politics
பாடசாலை மாணவியரிடம் இருந்து போதைபொருள்மீட்பு
பாடசாலைகளை மையப்படுத்திய போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அதன் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.பாடசாலைகளை மையமாகக் கொண்ட போதைப்பொருள்களின் பரவல் எந்தெந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது உள்ளது என்று விளக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்தற்போதுள்ள நிலைமைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ, அது எந்தவகையிலும் போதாது என்றதோடு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.இதேவேளை, பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.