Connect with us

Business

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களுக்கு மூன்று பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

Published

on

இலங்கையை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்ற முடியும் எனவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்காக 3 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் எனவும் ஆனால் வெளிநாட்டு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து 10 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். .இதுவரையில் இருந்த கல்வி முறையை மாற்றியமைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும், உலகளாவிய தேவைக்கு ஏற்ப பௌதீக பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி சைபர் தொழில்நுட்பத்திற்கான பல்கலைக்கழகங்களையும் நிறுவுவதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.வரவு செலவுத் திட்டக் குழுவின் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வரவு செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.