Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகள் திறப்பது குறித்து கல்வியமைச்சரின் அறிவிப்பு

Published

on

பாடசாலைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்;.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு வலயத்திற்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 242,000 ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.