Connect with us

Sports

தொடர் தோல்விகளால் தடுமாறும் இலங்கை, நேற்றைய ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்திடம் தோல்வி

Published

on

இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (29) முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்டபில் ஈடுப்பட்டது.

அதன்படி இலங்கையணி 42.3 ஓவர்களை மாத்திரம் எதிர்க்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு 186 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இங்கிலாந்து 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது.

இதற்கமைய இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.