Sports
உயிர்குமிழியை மீறிய வீரர்கள் தொடர்பில் நாமலின் நிலைப்பாடு

லண்டனில் ஒழுக்கயீனமாக நடந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.
மேற்படி வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அந்த காலம் முடிவடைந்த பின்னர் அவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒழுக்காற்று விசாரணை நடத்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.